ADDED : ஜூலை 16, 2025 07:15 AM
தமிழக அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கம்ப்யூட்டர், தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்கு, 5,000 ரூபாய் மாத சம்பளத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, கடந்த, 13 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. 'ஆட்சிக்கு வந்தால், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என்ற வாக்குறுதி, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது; இன்னும் நிறைவேற்றவில்லை.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட்டு விட்டு, அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதை விடுத்து, பகுதி நேர ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதை செய்ய மறுத்தால், தி.மு.க., அரசுக்கு, சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவது உறுதி.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,