அரசு மகப்பேறு மருத்துவமனையின் அவலம்; இதுதான் சிறந்த கட்டமைப்பா: நயினார் நாகேந்திரன் கேள்வி
அரசு மகப்பேறு மருத்துவமனையின் அவலம்; இதுதான் சிறந்த கட்டமைப்பா: நயினார் நாகேந்திரன் கேள்வி
ADDED : ஜூலை 16, 2025 03:12 PM

சென்னை: தொட்டில் இல்லாத கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தரையில் படுக்க நேரிடும் நிலை உள்ளது. இதுதான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவ கட்டமைப்பா என்று தமிழக அரசுக்கு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.
பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும். தமிழக அரசு அவல நிலையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளார்.