தி.மு.க., குடும்ப பிரச்னையை விட பா.ம.க., சண்டை பெரிதல்ல
தி.மு.க., குடும்ப பிரச்னையை விட பா.ம.க., சண்டை பெரிதல்ல
UPDATED : ஜூன் 03, 2025 07:29 AM
ADDED : ஜூன் 03, 2025 01:49 AM

'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்கள் அனைத்தும், நம் நாட்டிலேயே, நம் வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டது. இதை பெருமையாக கொண்டாடி வருகிறோம். ஆனால், இதற்கு சிலர் மாற்றுக்கருத்து சொல்லி வருகின்றனர்.
மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும், நாட்டின் மீது துளிகூட பற்று இல்லாமல் நடந்து கொள்வது சரியல்ல. இந்த விஷயத்தை அப்படியே அனுமதிக்க முடியாது. தொடரவும் விடக்கூடாது.
அதே நேரம், இந்த விஷயத்தில் பொதுமக்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பா.ஜ., சார்பில் மாபெரும் பிரசார இயக்கம் நடத்த உள்ளோம். தமிழகம் முழுதும் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
பா.ம.க.,வில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது போல, தி.மு.க.,வினர் பேசுகின்றனர். முதல்வர் ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதிக்கும் இடையே உள்ள பிரச்னையை விட, பா.ம.க., பிரச்னை ஒன்றும் பெரிதல்ல. தி.மு.க.,வோடு 30 ஆண்டுகாலம் உறவில் இருந்தவன் என்ற வகையில் தான், இதை நான் குறிப்பிடுகிறேன்.
- ராமலிங்கம்
துணைத் தலைவர்,
தமிழக பா.ஜ.,

