பாரதியார் மீது அவதுாறு பேசி இழிவுபடுத்தும் தி.க.,வினர்
பாரதியார் மீது அவதுாறு பேசி இழிவுபடுத்தும் தி.க.,வினர்
ADDED : டிச 22, 2025 02:07 AM

திராவிடர் கழகத்தினர், பாரதியார் மீது அவதுாறுகளை பேசி, இழிவுபடுத்தி வருகின்றனர். பாரதியார், பிராமணர் என்பதாலேயே திராவிடர் கழகத்தினர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
புத்தக திருவிழாவை திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட்கள் பிரசார மேடையாக பயன்படுத்துகின்றனர். துாத்துக்குடியில், வரும் 26, 27, 28 தேதிகளில், சுதேசி சந்தை நடத்தி, அதில் பாரதியாரின் உண்மை வரலாற்றை பேசுவோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஹிந்துக்கள் சிறுபான்மையாக இருப்பதால், கோவில் விழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
ஹிந்துக்கள் வழிபாடு நடத்த முடியாமல் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். ஹிந்துக்கள் சிறுபான்மையானால், வங்கதேசம் போல் ஆகிவிடும். சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காது என்பதால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தவெ.க தலைவர் விஜய், கருத்து ஏதும் சொல்லவில்லை.
- அர்ஜுன் சம்பத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி

