10 'சீட்' கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படாது
10 'சீட்' கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படாது
ADDED : டிச 22, 2025 02:07 AM

தி.மு.க.,வை உயர்த்திப் பிடிப்பதாக கூறுகின்றனர். கடந்த 2009 லோக்சபா தேர்தலில் முள்ளிவாய்க்கால் போரின்போது தி.மு.க., கூட்டணியில் இருந்தது பற்றி தற்போதும் விமர்சனம் உண்டு. வேங்கைவயல் பிரச்னையில் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியும் என்னை நோக்கி உண்டு. ஆனால், அது பற்றி, முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் ஆகியோரிடம் பலமுறை பேசினேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க., அரசு நிர்வாகத்தை எதிர்த்து எங்களைப் போல், யாரும் போராட்டம் நடத்தியதில்லை.
தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது அக்கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்னையில் அ.தி.மு.க., மற்றும் பிற தலைவர்களுடன் இணைந்து போராடினோம். பதவி பெரிதல்ல; 10 சீட் கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படப்போவதில்லை. விமர்சனங்களைத் தாண்டி தி.மு.க., கூட்டணியில் நீடிக்க காரணம் பதவி, பொருள் ஆசை இல்லை என்பதுதான்.
- திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள்

