ADDED : பிப் 01, 2026 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூட்டணி அமைப்பது நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்பதால், தாமதம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி அமைப்பதில், பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை. வெற்றி கூட்டணியை கண்டறிவதில் தான் சிக்கல். இறுதி முடிவு வரும் வரை, வெளியில் சொல்வது நன்றாக இருக்காது. அனைத்து தரப்பிலும் பேச்சு நடத்தி வருகிறோம்.
பா.ம.க., யாருக்கு, மாம்பழ சின்னம் யாருக்கு என்பது விரைவில் தெரியும். பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. ஏதாவது சொல்லி நெருடலை ஏற்படுத்த விரும்பவில்லை. ராமதாசை அன்புமணி நேரில் சந்தித்தால், அதை வரவேற்கும் முதல் நபராக நான் இருப்பேன்.
-- ஜி.கே.மணி, கவுரவ தலைவர், பா.ம.க.,

