'அடிக்கடி பொதுத்தேர்வு கூடாது என்பதே உளவியல் கருத்து'
'அடிக்கடி பொதுத்தேர்வு கூடாது என்பதே உளவியல் கருத்து'
ADDED : ஆக 10, 2025 03:12 AM

காரைக்குடி: சிவகங்கை காங்., - எம்.பி.,கார்த்தி, அளித்த பேட்டி:
தேர்தல் ஆணையம், தன்னிச்சையான அமைப்பு. அது நடுநிலையோடுதான் செயல்பட வேண்டும். ஆனால், தற்போதைய தேர்தல் ஆணையம் அப்படியில்லை; அதன் நடுநிலைத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது, எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டினால், பா.ஜ.,வினர் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்?
வட மாநிலத்தில் இருந்து, தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு வேலைக்கு வருவோர், வேலை முடிந்ததும், வேறு இடம் தேடி சென்று விடுவர். இதுதான் எதார்த்தம்.
ஆனால், அவர்கள் தமிழகத்தில் நிரந்தரமாக இருப்பவர்கள் போல் நினைத்து, அவர்களை, தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது சரியல்ல.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அடாவடியான வரி விதிப்பால், இந்தியாவிற்கு பாதிப்புதான். அதே நேரம், அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை அவர் உணர வேண்டும். இருந்தாலும், இப்பிரச்னை குறித்து, இரு தரப்பு பேச்சு நடத்தினால் சுமுக முடிவு ஏற்படலாம்.
உண்மையை மறைப்பதற்காகவே தமிழகத்தில் என்கவுன்டர் நடக்கிறதோ என்ற சந் தேகம் நியாயமானது. எப்போது தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க காங்., தயாராக உள்ளது. பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி இடையே நடப்பது குடும்பப் பிரச்னை.
இதுவரை பழனிசாமி தலைமையிலான கூட்டணி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது.
தமிழகத்தில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அது, அனைத்து பகுதிகளுக்கும் சமமாக இருந்திருக்க வேண்டும்.
அடிக்கடி பொதுத் தேர்வு வைத்தால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்பதே உளவியல் கருத்து. பத்தாம் வகுப்புக்கு பின், பிளஸ் 2 பொதுத்தேர்வு போதுமானது. அந்த நடைமுறை தான் ஏற்கனவே இருந்தது. இவ்வாறு கார்த்தி கூறினார்.