தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/படம் பிடிக்க துடிப்பு

படம் பிடிக்க துடிப்பு

படம் பிடிக்க துடிப்பு


ADDED : ஏப் 15, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரிய கட்சியின் கட்டளை மையங்கள் சென்னையின் 10 இடங்களில் செயல்படுகின்றன. அதில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளோடு, இன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலரும் பணியாற்றுகின்றனராம். அவர்கள், அந்த இடங்களுக்கு மாறு வேடத்தில் காரில் பதுங்கி பதுங்கி வந்து செல்கின்றனராம். அதை மோப்பம் பிடித்திருக்கும் எதிர்க்கட்சியினர், பதுங்கி வரும் அதிகாரிகளை படம் பிடிக்கத் துடிக்கின்றனராம். படத்துடன் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கவே இந்த முயற்சியாம்.

ரிப்போர்ட் சரியில்லை
2. கை கட்சியின் செல்வ தலைவரை சமீபத்தில் சூரிய கட்சித் தலைவர் அழைத்தாராம். பறந்தோடி சென்ற அவரிடம், 'தொகுதிகளை கண்டிஷனாக கேட்டுப் பெற்றீர்கள். ஆனால், பல தொகுதிகளில் ஜெயிக்க வாய்ப்பில்லை என எங்களுக்கு கிடைத்திருக்கும் சர்வே ரிப்போர்ட்கள் சொல்கின்றன. கட்சித் தலைமைக்கு சொல்லி விடுங்கள்' என சொல்ல, அனைத்தையும் கேட்டுக் கொண்ட கை தலைவர், 'என் தொகுதியில் வெற்றி எப்படி இருக்குன்னு சொல்லுங்க' என கேட்டாராம்.



மீண்டும் பிரசாரம்
3. விசில் கட்சித் தலைவர் போட்டியிடும் வட சென்னை தொகுதியில் லேட்டஸ்ட்டாக எடுத்த ஒரு சர்வேயில், 'வரும் நாட்கள் ரொம்பவும் முக்கியமானவை. தொகுதியில், கட்சியினர் கூடுதலாக பணியாற்றினால் மட்டுமே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும்' என சொல்லப்பட்டிருக்கிறதாம். இதனால், விசில் தலைவரை அந்த தொகுதிக்கு மீண்டும் ஒரு முறை அழைத்துச் சென்று பிரசாரமோ அல்லது ரோடு ஷோவோ நடத்தலாமா என யோசிக்கின்றனராம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us