தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'உண்மையான பயணம் இனிமேல் தான் தொடங்குகிறது'

 'உண்மையான பயணம் இனிமேல் தான் தொடங்குகிறது'

 'உண்மையான பயணம் இனிமேல் தான் தொடங்குகிறது'


ADDED : ஏப் 20, 2026 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 02:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ராமசுப்பிரமணியன் பேசியதாவது:

நீண்ட நாட்களாக, 'நீட்' தேர்விற்காக உங்களை செதுக்கிக் கொண்டு, மிகச் சிறந்த முறையில் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். இங்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள், உங்களுக்கு எரிச்சலை தரலாம். ஆனால், ஒரு சிலரின் தவறான செயல்களால், உங்களின் உழைப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே, 'நேஷனல் டெஸ்ட் ஏஜன்சி' மற்றும் சி.பி.எஸ்.இ., அமைப்புகள், இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எனவே, தயவு செய்து அவற்றை உங்கள் நலனுக்காக விதிக்கப்பட்ட பாதுகாப்பாக கருதி, முழுமையாக பின்பற்றுங்கள்.

தற்போது நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை மதிப்பிடும் ஒரு களம் இது. பொதுவாக, நாம் ஒரு தேர்வை எழுதியவுடன், எல்லாம் முடிந்து விட்டது என நினைப்போம். ஆனால், உண்மையான பயணம் இனிமேல் தான் தொடங்குகிறது. ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களை போன்ற உயர் கல்வி அமைப்புகள், உங்களை போன்ற திறமையான மாணவர்களின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us