மின்சாரத்துக்கான வருவாய், செலவு இடைவெளி 45 காசாக குறைந்தது
மின்சாரத்துக்கான வருவாய், செலவு இடைவெளி 45 காசாக குறைந்தது
ADDED : ஜன 03, 2025 01:07 AM

சென்னை: மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால், 2023 - 24ல், தமிழக மின் வாரியத்தின் ஒரு யூனிட் மின்சாரத்துக்கான சராசரி வருவாய் மற்றும் செலவுக்கான இடைவெளி, 45 காசாக குறைந்துள்ளது.
தமிழக மின்வாரியத்துக்கு மின்கட்டணம் வசூல் மற்றும் அரசு மானியம் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. மின்சாரம், நிலக்கரி, உபகரணங்கள் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம் போன்றவற்றால் செலவுகள் ஏற்படுகின்றன.
வரவை விட செலவு அதிகம் இருப்பதால், தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது. இதற்கு, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதே முக்கிய காரணம். கடந்த இரு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
மேலும், சொந்த மின் உற்பத்தி அதிகரிப்பு, செலவு குறைப்பு போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இதனால், 2023 - 24ல் ஒரு யூனிட் மின்சாரத்துக்கான சராசரி வருவாய், செலவுக்கான இடைவெளி, 45 காசாக குறைந்துள்ளது.
அந்த ஆண்டில் ஒரு யூனிட் வாயிலாக கிடைத்த சராசரி வருவாய், 10.41 ரூபாயாகவும், செலவு, 10.86 ரூபாயாகவும் இருந்தது.

