ADDED : டிச 31, 2025 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் மாவட்ட கடலில் கோள வடிவமுள்ள அரிய வகை உயிரினமான முள்ளெலிகள் காணப்படுகின்றன. இவற்றின் உடல் முழுவதும் முட்கள் இருக்கும். கடல் ஊமத்தை அல்லது மூரை என அழைக்கப்படுன்றன.
கடலின் அடிப்பகுதியில் வாழும் இவை, கடலில் உள்ள சிறிய உயிரினங்கள், இறந்த மீன்களின் எச்சங்களை உண்ணக்கூடியவை. சிலந்தி போல பாறைகளில் பற்றி, நகரும் தன்மை கொண்டவை. இவை 30 முதல், 50 ஆண்டுகள் வரை வாழும். கடல் படுகையின் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் இவை முக்கிய பங்கு வைக்கின்றன.

