ADDED : மார் 03, 2024 04:59 AM

சென்னை, : சென்னை விமான நிலையத்தில், நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகர் வேல்முருகன் மது போதையில், சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிரபல நாட்டுப்புற பாடகர் வேல்முருகன். இவர் நேற்று முன்தினம் மதியம், திருச்சி செல்ல விமான நிலையத்திற்கு வந்தார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவரை சோதனை செய்தனர்.
அப்போது, வேல்முருகன் மது போதையில் இருந்தது தெரியவந்தது; உடனே, தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த அவர், பாதுகாப்பு படை வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர் மன்னிப்பு கேட்டதை அடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் அவரை வேறு விமானத்தில் திருச்சி செல்ல அனுமதித்தனர்.

