ADDED : ஜன 01, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம் : நாகை மாவட்டம், வேதாரண்யம், கொள்ளித்தீவை சேர்ந்தவர் கணேசன், 62, கூலி தொழிலாளி. இவரது மகன் செல்வம், 44. கணேசன் வீட்டிற்கு அருகிலேயே குடும்பத்துடன் வசிக்கிறார்.
எந்த வேலைக்கும் செல்லாமல், குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததால், செல்வம் குடும்பத்தினரையும் கணேசனே பராமரித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு போதையில் கணேசன் வீட்டிற்கு சென்ற செல்வம், செலவிற்கு பணம் கேட்டார். கணேசன் தர மறுத்தார்.
ஆத்திரமடைந்த செல்வம், அங்கிருந்த கட்டையை எடுத்து கணேசன் தலையில் அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வேதாரண்யம் போலீசார், செல்வத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.