sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை...: விஜயை விமர்சிக்கிறார் திருமாவளவன்

/

புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை...: விஜயை விமர்சிக்கிறார் திருமாவளவன்

புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை...: விஜயை விமர்சிக்கிறார் திருமாவளவன்

புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை...: விஜயை விமர்சிக்கிறார் திருமாவளவன்

23


UPDATED : மார் 08, 2026 05:56 PM

ADDED : மார் 08, 2026 05:53 PM

Google News

23

UPDATED : மார் 08, 2026 05:56 PM ADDED : மார் 08, 2026 05:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள், '' புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை போன்று உள்ளது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தவெக சார்பில் நேற்று மாமல்லபுரத்தில் நடந்த மகளிர் தின விழாவில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், ''அனைத்து குடும்ப தலைவியருக்கும் மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும்; அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு கட்டணமின்றி பயணம்; தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்,” என அறிவித்து இருந்தார்.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது: புலியை பார்த்து பூனை கோடு போட்டு கொண்ட கதை என்று சொல்வார்களே அப்படித்தான் என்று நான் கருதுகிறேன். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.

பல புதிய அறிவிப்புகளையும் மகளிர் நலன் கருதி அறிவித்துள்ளது. இதனை எதிர்கொள்வதற்கு இத்தகைய வாக்குறுதிகளை வழங்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது. அது எந்த வகையிலும் திமுக கூட்டணியின் செல்வாக்கை பாதிக்காது. திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us