ADDED : மார் 15, 2024 12:47 AM
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும், 26ல் துவங்கும் நிலையில், மொழி சிறுபான்மையினர் நடப்பாண்டில், அவர்களின் தாய்மொழி பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமே, தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல், பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. தமிழ் கட்டாய பாட சட்டம் இயற்றப்பட்டு, 18 ஆண்டுகளாகியும், தமிழ் ஆசிரியர்களை நியமிக்காதது ஏன் என்று, பள்ளி நிர்வாகங்களிடம் தமிழக அரசு கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.
ஆனால், எந்த கேள்வியும் கேட்காமல், தமிழ் தேர்வை எழுதுவதிலிருந்து மேலும் ஓராண்டுக்கு தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. தமிழை கட்டாய பாடமாக்குவதில், அரசு காட்டும் ஆர்வம் இவ்வளவு தான். தமிழ் கட்டாய பாட சட்டத்தை, தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
ராமதாஸ் பா.ம.க., நிறுவனர்

