ADDED : டிச 25, 2025 08:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் தீப விஷயத்தில், எந்த ஒரு இஸ்லாமியரும் எதிர் கருத்து கூறவில்லை. விவகாரத்தை தேவையில்லாமல் பெரிதாக்கியது தமிழக அரசுதான்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், சிறுபான்மையினர் அச்சத்துடன் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அச்சத்துக்கு காரணமே அவர் தான். கருணாநிதி காலத்தில் இருந்து இன்றுவரை, 'சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கிறோம்' என்று சொல்லித்தான், தி.மு.க., சிறுபான்மையினத்தோர் ஓட்டுகளைப் பெற்றது; ஆட்சிக்கும் வந்தது.
ஆனால், அவர்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதாக கூறினால், அதற்கு தி.மு.க., தான் பொறுப்பேற்க வேண்டும். அப்படியென்றால், சிறுபான்மையினருக்கு தி.மு.க., பாதுகாப்பு அளிக்கவில்லையா? சிறுபான்மையினத்தோர் பாதுகாப்பாகத்தான் உள்ளனர்; முதல்வர் தான் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். மக்களை பிரித்தாள்வது சூழ்ச்சி; ஒற்றுமைக்காக ஆள்வதுதான் ஆட்சி.
- பேரரசு, திரைப்பட இயக்குநர்.

