ADDED : டிச 25, 2025 08:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசியல் மேடையில் தமிழ் பெண்கள் பற்றி புகழ்ந்து பேசும் விஜய், தன் திரைப்படங்களில் தமிழ் ஹீரோயின்களை தொடர்ந்து நிராகரித்துள்ளார். சினிமா என்றால், அவருக்கு தமிழ் பெண்கள் பிடிக்காதா? விஜய்க்கு தன் கட்சியில் இருக்கும் 10 தொண்டர்கள் பெயர் கூட தெரியாது. அப்படிப்பட்ட தலைவர் தான் த.வெ.க.,வை தாங்கிப் பிடிக்கிறார். புரிதல் இல்லாத தொண்டர்களால், த.வெ.க., தள்ளாடி வருகிறது. அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறி தான். த.வெ.க.,வில் இருப்போர், அடுத்த கட்சியைச் சேர்ந்த பெண்களை, 'நாளைக்கு உன்னை சாகடித்து விடுவேன்; முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன்' என்றெல்லாம் மிரட்டுகின்றனர். இதெல்லாம் சினிமா வசனம் போல உள்ளது. இதை, கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் கண்டித்து கட்டுப்படுத்த வேண்டும். அப்படிபட்டவர் நாளையே ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கை எப்படி காப்பார்?
- திவ்யா சத்யராஜ், ஐ.டி., அணி துணை செயலர், தி.மு.க.,

