ADDED : ஜன 30, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவேற்காடு முதல் கல்பாக்கம் வரை, வங்க கடற்கரையில், உலகின் பல நாடுகளில் இருந்த வந்த, 1000க்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள், கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்துள்ளன. தமிழக அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
கடற்கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் தான், கடல் ஆமைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அந்த பகுதிகளில் கடல் ஆமைகள் முட்டையிடும் காலத்தில் இழுவைப் படகுகளையும், நீண்ட வலைகளையும் பயன்படுத்த, 1983ம் ஆண்டின் தமிழக கடல்பகுதி மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை முழுமையாக செயல்படுத்தப்படாததே, கடல் ஆமைகள் இறப்புக்கு காரணம்.
அன்புமணி, தலைவர், பா.ம.க.,

