sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எல்லாமே ‛'இல்லை மயம்' தான் ஒப்புக்கு செயல்படும் தமிழக சித்தா மருத்துவத் துறை

/

எல்லாமே ‛'இல்லை மயம்' தான் ஒப்புக்கு செயல்படும் தமிழக சித்தா மருத்துவத் துறை

எல்லாமே ‛'இல்லை மயம்' தான் ஒப்புக்கு செயல்படும் தமிழக சித்தா மருத்துவத் துறை

எல்லாமே ‛'இல்லை மயம்' தான் ஒப்புக்கு செயல்படும் தமிழக சித்தா மருத்துவத் துறை


ADDED : ஜன 18, 2025 05:47 AM

Google News

ADDED : ஜன 18, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழகத்தில் சித்தா மருத்துவத்துறை டாக்டர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வோ, பதவிஉயர்வோ, வாகன வசதியோ எதுவும் இல்லாத நிலையில் செயல்படுகிறது.

தமிழகத்தில் நெல்லை, சென்னையில் சித்த மருத்துவக் கல்லுாரி, நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இங்குள்ள டீன்களுக்கு என்று தனியாக அரசு வாகனம் இல்லை. மற்ற அனைத்து அரசு மருத்துவமனை டீன்களுக்கு தனி கார் தரப்பட்டுள்ளது. இருபது மாவட்டங்களுக்கு மட்டுமே மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களில் உள்ள சித்த மருத்துவப்பிரிவுகளை கண்காணிக்க வேண்டும். இவர்களுக்கு வாகனம் தரப்படாததால் சொந்த கார் அல்லது பஸ்சில் தான் அலுவல் ரீதியாக பயணிக்கின்றனர்.

இதுகுறித்து அரசு சித்தா டாக்டர்கள் கூறியதாவது:

அலோபதி டாக்டர்களுக்கு முறையான இடைவெளியில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அடுத்தடுத்து பதவி உயர்வுடன் இணை இயக்குநர்களானாலும் சித்தா டாக்டர்கள் உதவி சித்த மருத்துவ அலுவலர்களாக பதவியில் தொடர்கின்றனர். ஒருசிலருக்கே மாவட்ட சித்தா மருத்துவ அலுவலராக பதவி உயர்வு கிடைக்கிறது. பெரும்பாலும் உதவி சித்தா மருத்துவ அலுவலர்களாகவே ஓய்வு பெறும் அவலம் தொடர்கிறது.

3முதல்5ஆண்டுகளுக்கு ஒருமுறையே டி.என்.பி.எஸ்.சி., மூலம் சித்தா டாக்டர்களுக்கான காலிப்பணியிடம் அறிவிக்கப்படுகிறது. தற்போது 200 டாக்டர்கள், 100 பார்மசிஸ்டுகளுக்கான பணியிடம் காலியாக உள்ளது. சமீபத்தில் 100 பணியிடத்திற்கான டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியானது. ஆனால் 2025 ஆகஸ்டில் காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்து விடும் என்பதால் மொத்த காலியிடத்திற்கான தேர்வு அறிவிப்பை அரசுவெளியிட வேண்டும்.

தமிழ் மருத்துவமான சித்தா மருத்துவத்துறையை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எங்களுக்கான காலிப்பணியிட அறிவிப்பு, பதவி உயர்வு, வாகன வசதி அனைத்திலும் தமிழக அரசு ஓரவஞ்சனை செய்கிறது. சித்தா மருத்துவத்துறை மேல் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us