ADDED : நவ 23, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'அமலாக்கத்துறை சோதனை எதுவும் என் வீட்டில் நடக்கவில்லை' என, காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவின் மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 15 இடங்களில், கடந்த 19ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
தமிழக காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு தலைவர் மகாத்மா சீனிவாசன் வீட்டிலும், சோதனை நடந்ததாக தகவல் வெளியானது.
இத்தகவலை, மகாத்மா சீனிவாசன் மறுத்துள்ளார். 'அமலாக்கத்துறை சோதனை எதுவும் என் வீட்டில் நடக்கவில்லை. அவ்வாறான தகவல் தவறானது' என, அவர் தெரிவித்துள்ளார்.

