ADDED : மார் 14, 2026 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் கஜானா நிரம்பி இருந்தது. தி.மு.க., ஆட்சி காலத்தில் கஜானா காலியாகிவிடும். கோபாலபுரத்து கருவூலம் மட்டும் நிரம்பும். அதை பறிமுதல் செய்தாலே, தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும்.
ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். அதன் அடிப்படையில் சசிகலா கட்சி துவக்கி இருக்கிறார். தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கட்சிகள், எங்கள் தலைமையை ஏற்றால், அ.தி.மு.க., கூட்டணிக்கு வரலாம்.
--ஜெயகுமார்
முன்னாள் அமைச்சர்,
அ.தி.மு.க.,

