ADDED : ஏப் 25, 2025 08:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டி வந்துள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்தார்.
ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து மாலை ஊட்டி அருகே முத்தநாடு மந்துக்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், அவரது மனைவி, கவர்னர் ரவி ஆகியோர் சென்றனர். தோடர் பழங்குடியினர் மக்கள் வரவேற்றனர். பின், தோடர் பழங்குடியினருடன் துணை ஜனாதிபதி பாரம்பரிய நடனமாடினர். பின், குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் லட்சுமி பவ்யா ஆகியோர் பங்கேற்றனர் .