தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வலை வளை: அக். 14

வலை வளை: அக். 14

வலை வளை: அக். 14


UPDATED : அக் 14, 2026 12:00 AM

ADDED : அக் 13, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:00 AM ADDED : அக் 13, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூட்டையுடன் வாடிக்கையாளர்

மலைத்தனர் ஷோரூம் ஊழியர்கள்

தெ லுங்கானா மாநிலம் லஷ்மிபேட்டையை சேர்ந்த பாதிரியார் ரவி ஜோசப், பைக் வாங்குவதற்காக ஷோரூமுக்கு போனார். பைக் விலை 1.23 லட்சம் ரூபாய். மொத்த தொகையும், 10 ரூபாய் நாணயங் களாக இருப்பதாக அவர் சொன்னதும், ஷோரூம் ஊழியர்கள் மலைத்துப் போயினர். சொன்னபடியே மூட்டைகளை கொண்டு சென்று இறக்கினார். தொகையை எண்ணி முடிப்பதற்கு, கடை ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பிடித்தது.

வீட்டுக்கு தேவையான பொருட்கள், காய்கறிகள் என எது வாங்கினாலும் மிச்சமாகும் தொகையை, 10 ரூபாய் நாணயங்களாக மாற்றி வைத்துள்ளார். மூன்று ஆண்டுகளாக இதே வேலையாக இருந்துள்ளார். 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று சிலர் அச்சுறுத்தியபோதும், ஜோசப் அதை பொருட்படுத்தவில்லை. நம்பிக்கையுடன் அவர் சேர்த்த நாணயங்கள், புதிய பைக் வாங்க உதவிய செய்தி, வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘பைக்’ சாகசம் செய்த பிரபலம்

‘பழுத்தது’ 16,000 ரூபாய்

உ .பி., மாநிலம் சீதாபூரை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் ஷிவான்யா பாண்டே. இவர், ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றில், ஹெல்மெட் அணியாமல் இரு கைகளையும் விட்டபடி சாகசம் செய்த வீடியோ, வலைதளங்களில் பரவியது. அதைக்கண்ட வலைதள பிரியர்கள் பலரும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாரை வலியுறுத்தினர்.

உஷாரான ஷிவான்யா, தான் வெளியிட்ட வீடியோவில் கொஞ்சம் எடிட் செய்து விட்டார். ‘யாரும் இப்படி சாலையில் செய்யாதீங்க, இது ஆபத்தானது’ என்று கைகூப்பி கும்பிடுவது போல, வீடியோவை மாற்றினார். ஆனாலும் விடாத போலீசார், அம்மணிக்கு, 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விட்டனர்.

மானத்தை வாங்கியது ‘மூட்டை’

விமான பயணியர் திண்டாட்டம்

ஆ ஸ்திரேலியாவில் இருந்து இத்தாலிக்கு, 17 மணி நேரம் பயணித்து வந்தது கான்டாஸ் நிறுவன விமானம். போயிங் 787 டிரீம்லைனர் ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில், ‘எகானமி’ பிரிவில் வந்த பயணியர், மூட்டைப்பூச்சி கடியால் அவதிப்பட்டனர். விமான ஊழியர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் அரிப்பு தடுப்புக்கான மருந்து கொடுத்து நிலைமையை சமாளித்தனர். நேரம் செல்லச் செல்ல, பயணியர் அனைவருமே புகார் சொல்ல ஆரம்பித்தனர். விமானத்தில் இருந்த மருந்தும் தீர்ந்து போனது. பயணியர் புலம்பியபடியே ரோம் வந்து சேர்ந்தனர். ‘சுத்தம் செய்ய வேண்டும்’ என்பதற்காக, மறு மார்க்கத்தில் விமானத்தின் பயணத்தை கான்டாஸ் நிறுவனம் ரத்து செய்தது, வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.

‘குட் டச், பேட் டச்’ வீடியோ

வலைதளங்களில் வரவேற்பு

ஹ ரியானா மாநிலம் யமுனா நகரை சேர்ந்த தனியார் பள்ளி சார்பில் வெளியிடப்பட்ட, ‘குட் டச், பேட் டச்’ விழிப்புணர்வு வீடியோ, வலைதளங்களில் ஒரு கோடி பார்வைகளை கடந்திருக்கிறது.

ஒரு சிறுமி, ‘குட் டச்’ என்றும், ‘பேட் டச்’ என்றும் எழுதப்பட்ட இரு பதாகைகளை கையில் வைத்திருக்கிறார். அருகில் நின்றிருக்கும் ஆசிரியை, தொட்டுக் காட்டுவதற்கு தகுந்தபடி, ‘குட் டச்’ என்றும், ‘பேட் டச்’ என்றும் பதாகைகளை சிறுமி காட்டுகிறார். குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துமீறியது ரோபோ

அதிர்ச்சியில் போலீஸ்

ஜெ ர்மனியின் கொலோன் நகரில் உணவகத்தின் முன் நின்றிருந்தது அந்த ரோபோ. அதைக்கண்ட சிறுமி, அருகில் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். உடனே அந்த ரோபோ, சிறுமியை ‘பேட் டச்’ செய்து அநாகரிகமாக நடந்து கொண்டது.

சிறுமி அலறியபடி அந்தப்பக்கம் நகர்ந்து கொண்டார். இந்த சம்பவம், நேரலையில் வலைதளங்களில் ஒளிபரப்பானது. ரோபோவை யாரோ இயக்கியதாக புகார் எழுந்தது. அதன் உரிமையாளரான, 16 வயது சிறுவன், அவனது 19 வயது நண்பன் இருவரும் தான் இதற்கு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீஸ் வருவதற்கு முன், அவர்கள் இருவரும் ரோபோவை துாக்கிச்சென்று காரில் ஒளித்து வைத்துள்ளனர். அதை பறிமுதல் செய்த போலீசார், ரோபோ தன்னிச்சையாக செயல்பட்டதா, யாரேனும் அதை இயக்கினரா என்று ஆய்வு செய்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us