sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகளிர் இலவச பஸ்சில் திடீர் ஓட்டை தொங்கியபடி பயணித்த பெண்

/

மகளிர் இலவச பஸ்சில் திடீர் ஓட்டை தொங்கியபடி பயணித்த பெண்

மகளிர் இலவச பஸ்சில் திடீர் ஓட்டை தொங்கியபடி பயணித்த பெண்

மகளிர் இலவச பஸ்சில் திடீர் ஓட்டை தொங்கியபடி பயணித்த பெண்


UPDATED : பிப் 06, 2024 11:53 PM

ADDED : பிப் 06, 2024 08:23 PM

Google News

UPDATED : பிப் 06, 2024 11:53 PM ADDED : பிப் 06, 2024 08:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை:அரசு பேருந்தில் பயணித்த பெண் பயணி, பேருந்தின் பலகை உடைந்து ஓட்டையில் சிக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு வரை செல்லும்,'தடம் எண்: 59' மாநகர பேருந்து, பயணியரை ஏற்றிக் கொண்டு, அமைந்தகரை வழியாக கோயம்பேடை நோக்கிச் சென்றது.

மகளிருக்கான கட்டணமில்லா இலவச பேருந்து என்பதால், பெண் பயணியர் அதிகமாக இருந்துள்ளனர்.

பேருந்து, அமைந்தகரை 'ஸ்கை வாக்' வணிக வளாகம் அருகே சென்ற போது, பின்புறம் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர், என்.எஸ்.கே., நகர் நிறுத்தத்தில் இறங்க எழுந்துள்ளார்.

அப்போது திடீரென, அவர் நின்ற இடத்திலிருந்த பலகை உடைந்துள்ளது. ஓட்டை வழியாக கீழே விழுந்த அவர், முன் இருக்கையின் கம்பியை பிடித்து, கால் பகுதி மட்டும் தொங்கியபடி சத்தம் போட்டுள்ளார்.

இதை பார்த்த சக பயணியர் அலறி கூச்சலிட, அண்ணா வளைவு மேம்பாலம் அருகில், பேருந்து நிறுத்தப்பட்டது.

உடனே, ஓட்டையில் சிக்கிய அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதில் அவருக்கு, சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஆட்டோவில் கிளம்பிச் சென்றுள்ளார்.

பேருந்தில் பயணித்த பயணியர் இதுகுறித்து ஓட்டுனர், நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதை கண்டுகொள்ளாத அவர்கள், சிறுது துாரத்தில் சாலையில் விழுந்து கிடந்த பலகையை மட்டும் எடுத்தனர்.

பின், மற்ற பயணியரை அவ்வழியே வந்த மற்றொரு பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் பேருந்துடன் தப்பினர்.

பயணியர் சிலர், இதை வீடியோவாக எடுத்து, சமுக வலைதளங்களில் பரப்பினர். இதுகுறித்து, அமைந்தகரை போலீசார் மற்றும் அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தகவலே தெரியாது... போலீஸ் 'எஸ்கேப்'


இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, 'சம்பவம் குறித்து, எந்த புகாரும் வரவில்லை. முதல் கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் 'மின்ட்' பகுதியைச் சேர்ந்த ஷானாஸ், 30, என்பதும், என்.எஸ்.கே., நகரில் 'பிரின்ட்டிங் பிரஸ்'சில் பணிபுரிவதும் தெரிந்தது. 'வீடியோ' ஆதாரத்தின் அடிப்படையில், பேருந்து ஓட்டுனர், நடத்துனரை தேடி வருகிறோம்' என்றனர்.



போக்குவரத்து பாதிப்பு :


அமைந்தகரை, 'ஸ்கை வாக்' அருகில் சம்பவம் நடந்ததால், பேருந்து சாலையின் நடுவே நிறுத்தப்பட்டது. இதனால், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லுாரி வரை, 2 கி.மீ., துாரம் போக்குவரத்து பாதிப்பு இருந்தது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யாமல், போலீசார் அலட்சியமாக இருந்துள்ளனர்.



ஓட்டை பேருந்துகளை இயக்க வற்புறுத்தல்


இதுகுறித்து, மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவர் கூறியதாவது:வழித்தடத்தில் இயக்குவதற்கு லாயக்கற்ற பேருந்துகளை, அரசு பயன்படுத்தி வருகிறது. இவற்றை கட்டாயத்தின் பெயரில் இயக்கி வருகிறோம். பெரும்பாலான பேருந்துகளில், 50 சதவீதம் 'பிரேக்' கிடையாது. பல ஆண்டுகளாக ஓட்டை, உடைச்சல் பேருந்தை தான் இயக்குகிறோம். பேருந்தில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னை கூட சீரமைக்கப்படுவதில்லை. சிலர் சொந்த பணத்தை செலவு செய்து கூட சீரமைக்கிறோம். குறிப்பாக, மகளிருக்கான இலவச பேருந்துகள் படுமோசமாக உள்ளன. காலாவதியான பேருந்துகள், ஓராண்டிற்கு கூடுதல் அனுமதி வாங்கி இயக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.



நடவடிக்கை


சென்னை மாநகர போக்குவரத்து நிர்வாக இயக்குனர், ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கையில், 'பஸ் பலகை உடைந்து பெண் பயணி காயமடைந்த விவகாரத்தில், பஸ்சை பழுது பார்த்த பேசின்பாலம் பணிமனை பணியாளர்கள், பொறுப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க, சிறப்பு குழு அமைக்கப்படும்' என்று கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us