ADDED : ஜன 05, 2025 02:26 AM
எரிசக்தி இந்தியாவிற்கு மிகவும் தேவை. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் என்பது இயற்கையான செயல்முறை வாயிலாக, தொடர்ந்து பெறப்படும் எரிசக்தி மூலங்கள் ஆகும். அணுசக்தி ஆற்றலை பயன்படுத்தி உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை நிவர்த்தி செய்தல், நிலையான ஆற்றல் தீர்வுகளை உருவாக்குதல், சுற்றுச்சூழலின் தாக்கத்தை குறைத்தல் தற்போது மிகவும் முக்கிய தேவை.
அணுசக்தியை தனியார்மயமாக்கும் யோசனை இந்தியாவில் இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கும் வேளையில், ஒரு ஸ்டார்ட்அப் இந்த துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. முடிவில்லாத துாய்மையான எரிசக்தியை சூரிய ஒளி வழங்கினாலும் சூரியனின் முழு திறனையும் நம்மால் உபயோகிக்க இயலவில்லை. மாற்று என்ன.
நாம் சொந்த சூரியனை உருவாக்கி இலவச ஆற்றலுக்கான தேடலை அதிகமாக்கலாம் என்கிறது இந்த ஸ்டார்ட்அப். விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தும், வணிக அளவில் வெற்றியை அடைய முடியவில்லை. சீனாவின் செயற்கை சூரியன், எக்ஸ்பெரிமெண்டல் அட்வான்ஸ்டு சூப்பர் கன்டக்டிங் டோகாமாக் (இஎஸ்டி) குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவில், அனுபல் பியூஷன் இந்த திசையில் செயல்பட்டு, அணுக்கரு இணைவு மூலம் மின்சார உபரியை (Electricity Surplus) உருவாக்கும் இந்தியாவைக் கற்பனை செய்கிறது. டாக்டர் பிரவின் கினி, முகுல் ஜெயின் ஆகியோரால் நிறுவப்பட்ட அனுபல் பியூஷன் (Anubal Fusion) அணுகரு இணைவு (Nuclear Fusion) தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் ஸ்டார்ட்அப் ஆகும். பியூஷன் எனர்ஜி என்பது, இரண்டு அணுக்கருக்கள் இணைந்து புதிய அணுக்கருவை உருவாக்கும் போது வெளியாகும் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது.
இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி அணுக்கரு இணைவை அடைய எரிபொருள் துகள்களை சூடாக்க உயர்-ஆற்றல் லேசர்களைப் பயன்படுத்துகிறது, இது அதிக அளவு ஆற்றலை உருவாக்குகிறது. கடந்த நவம்பரில் ஸ்டார்ட் அப், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அதன் ஆரம்பப் பணியை தொடங்குவதற்காக Speciale Invest நிறுவனத்திடமிருந்து விதை நிதியை (Seed Capital) திரட்டியுள்ளது.
இந்த கம்பெனியின் நோக்கம், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி நிவர்த்தி செய்தல், நிலையான ஆற்றல் தீர்வு உருவாக்குதல், அனைவருக்கும் எரிசக்தியை கொடுத்தல். உலகம், எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அணுக்கரு இணைவு (Nnuclear Husion) நம்பிக்கை பாதையை முன்வைக்கிறது. அனுபல் பியூஷன், அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தை உருவாக்க உழைக்கும் முதல் இந்திய ஸ்டார்ட்அப் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைய தளம்: www.anubalfusion.com
சந்தேகங்களுக்கு: இ-மெயில்: Sethuraman.sathappan@gmail.com;
அலைபேசி: 98204 51259 இணையதளம் www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -

