ADDED : ஜன 09, 2024 02:45 AM
திருச்சி: திருச்சி, உறையூர் அருகே, ராமலிங்க நகரை சேர்ந்தவர் ஜாபர் உசேன், 38, தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி.
இவர், நேற்று முன்தினம், கடைகளில் வசூலான 5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, பைக்கில், வாளாடியில் உள்ள தனியார் நிறுவன மேலாளர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சென்ற போது, லால்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரி, ஜாபர் உசேன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்தின் போது அங்கிருந்த சிலர், அவருக்கு உதவுவது போல நடித்து, ஜாபர் உசேன் வைத்திருந்த, 5 லட்சம் ரூபாயை திருடி சென்று விட்டனர். அவர்கள் மீது ஜாபர் உசேன் போலீசில் புகார் செய்தார்.
கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிந்து, பணம் திருடியவர்களை தேடி வருகின்றனர்.