ADDED : ஏப் 22, 2025 06:41 AM

கடலுார்: கடலுாரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
உண்மைக்கும், நேர்மைக்கும் பஞ்சம் உள்ள கட்சிகளோடு கூட்டணி வைக்காமல், மக்களிடம் தஞ்சம் அடைந்துள்ளோம்.
உயர்ந்த கொள்கை, உயர்ந்த நோக்கத்தோடு மக்களை முழுமையாக நம்பி களத்தில் நிற்கிறோம். எங்களை நம்பி ஓட்டளித்த மக்களால் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதே வேகத்தோடு, 2026 தேர்தலில் புதிய வியூகத்தோடு களம் இறங்குகிறோம். சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள், இனிமேல் இந்த சீமான் ஆட்டத்தை பார்ப்பீர்கள்.
என் கட்சியில் இருந்து விலகுபவர்களை, வேறு கட்சிக்கு செல்வதற்கு பதிலாக விஜய் கட்சிக்கு செல்லுமாறு கூறினேன். காரணம், அவர்களை அங்கு ஒருநாளும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.
என் தலைமையை ஏற்று, ஆரிய - திராவிட கலப்பில்லாத கட்சிகள் வந்தால் கூட்டணி பற்றி யோசிப்பேன். கூட்டணி வைத்து சாதித்த கட்சிகள் இல்லை. நிரந்தர வெற்றிக்கான இலக்குடன் செல்கிறோம். அதனால், தற்காலிக தோல்வி குறித்து கவலையில்லை. அ.தி.மு.க.,வை பா.ஜ., வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்த்தது எனக் கூறுவது சரியல்ல. கூட்டணி முடிவானதும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், அமித் ஷாவும் விருந்து சாப்பிட்ட பின், அது பற்றி பேசக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.