ADDED : பிப் 17, 2024 12:16 AM
சென்னை:தமிழகத்தில், 245 சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடந்து முடிந்தது. இறுதியாக தேர்வானவர்களின் பட்டியலும் வெளியானது.
திருவண்ணாமலை மாவட்டம், புலியூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீபதி என்பவர், 23, வயதில் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றார். இவர், பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அரசாணையின் வழியே, ஸ்ரீபதி தேர்வாகி உள்ளார் என்றும், மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் இளம் வயதில் இந்த நிலையை எட்டியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், அவரை பாராட்டியும், சமூக வலைதளத்தில் முதல்வர் பதிவு வெளியிட்டார்.
இந்த சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில், பழங்குடியின பிரிவை சேர்ந்த ஆறு பேர் உள்ளனர். அவர்களில், ஸ்ரீபதி உள்ளிட்ட இருவர் பெண்கள்.