புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., - பா.ஜ., இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது / தி.மு.க., - பா.ஜ., இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது
/
செய்திகள்
தி.மு.க., - பா.ஜ., இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது
ADDED : ஜன 28, 2025 06:15 AM
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், இந்தியாவுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. அதில், 15 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய், அதாவது 80 சதவீத முதலீடுகளை மகாராஷ்டிரா பெற்றுள்ளது. தெலுங்கானா, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட முதலீடு கிடைக்கவில்லை. இதுபற்றி கேட்டால், 'மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்துள்ளது; பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது' என, தி.மு.க., அமைச்சர்கள் சொல்கின்றனர். ஆனால், தமிழகத்தில் எந்த பொருளாதார வளர்ச்சியும் நடக்கவில்லை. பா.ஜ., - தி.மு.க., இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ஜ.,வுக்கு கொத்தடிமையாக தி.மு.க., இருக்கும். அ.தி.மு.க., மீது குற்றம்சாட்ட, தி.மு.க.,வுக்கு எந்த உரிமையும் இல்லை. 'கார்ப்பரேட்' மோடி அரசும், ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசும், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் செய்த சதி, மக்கள் போராட்டத்தாலும், அ.தி.மு.க., எதிர்ப்பாலும் முறியடிக்கப்பட்டது.-ஜெயகுமார், முன்னாள் அமைச்சர்