ADDED : ஜன 03, 2026 02:27 AM

சென்னை: நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்துள்ள படம் பராசக்தி . வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந் நிலையில், தன் செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்ட பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, '' பராசக்தி பட தயாரிப்பு குறித்து, 2024ல் தகவல் தெரிந்தும், கடந்த டிசம்பரில் மனுதாரர் வழக்கு தொடர்ந்து உள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது,'' என உத்தரவிட்டார்.
மேலும், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுபடி, செம்மொழி கதை மற்றும் பராசக்தி கதையை ஆய்வு செய்து, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, வரும் 28ம் தேதி வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.

