sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மூலதனம் திரட்ட முட்டுக்கட்டை இல்லை

/

மூலதனம் திரட்ட முட்டுக்கட்டை இல்லை

மூலதனம் திரட்ட முட்டுக்கட்டை இல்லை

மூலதனம் திரட்ட முட்டுக்கட்டை இல்லை


ADDED : டிச 22, 2024 02:46 AM

Google News

ADDED : டிச 22, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில், ஆறு கோடிக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) உள்ளன. இவற்றில் 11 கோடிக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஏற்றுமதியிலும் இந்நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இவை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, மூலதனப் பற்றாக்குறை.

வெளி மார்க்கெட்டில் மூலதனத்தை திரட்ட அதிக வழிகள் இல்லை. காரணம் சிலர் மட்டுமே இந்த வகை நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலை பங்கு மூலதனத்தை வழங்குகின்றனர்.

எம்.எஸ்.எம்.இ., நிதியம்


பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கிணங்க, 2020 மே 13ம் தேதி, 'ஆத்மநிர்பா பாரத்' தொகுப்பின் கீழ், எம்.எஸ்.எம்.இ., நிதியம் உருவாக்கப்பட்டது.

இதன் விளைவாக, தேசிய சிறு தொழில் கழகம் (என்.எஸ்.ஐ.சி.,) சார்பில் வென்ச்சர் கேபிடல் பண்ட் லிமிடெட் (என்.வி.சி.எப்.எல்.,) என்ற துணை நிறுவனம் துவங்கப்பட்டது.

எஸ்.ஆர்.ஐ., நிதி


பத்தாயிரம் கோடி ரூபாய் ஒட்டுமொத்த நிதித்தொகுப்புடன் 'சுய சார்பு இந்தியா' (எஸ்.ஆர்.ஐ.,) நிதி உருவாக்கப்பட்டது. இதற்கு என்.எஸ்.ஐ.சி., நிதியுதவி செய்துள்ளது. இது தவிர தனியார் சமபங்கு நிதி மற்றும் துணிகர மூலதன நிதி 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.ஐ., நிதி மூலம், எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு உதவி கிடைப்பதால், அவற்றின் உயர் வளர்ச்சி சாத்தியமாகிறது.

அனைத்துவித 'ஈக்விட்டி'களை அளித்தல், எம்.எஸ்.எம்.இ.,க்களைப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடுதல் மூலம் எம்.எஸ்.எம்.இ., வணிகங்களின் விரைவான வளர்ச்சியை ஆதரித்தல், இவை மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியன, எஸ்.ஆர்.ஐ., நிதியின் நோக்கங்கள். எம்.எஸ்.எம்.இ.,க்கள் நாடு முழுவதும் பரவி இருப்பதால் இந்த நிதியின் நோக்கம் மற்றும் இலக்கு, தொலைதுாரப் பகுதிகளில் உள்ள நிறுவனங்களையும் ஆதரிப்பதாகும்.

இதுகுறித்து அறிந்துகொள்வதற்கான லிங்க்: www.nvcfl.co.in/Contents/pdfs/Revised_Final_SRI_Operating_Guidelines

தொடர்புக்கு: NSIC Venture Capital Fund Limited, NSIC Bhawan, Okhla Industrial Estate, New Delhi - 110020 (India) இ மெயில்: osd@nvcfl.co.in தொலைபேசி: 011--2692 4510

உங்கள் சந்தேகங்களுக்கு: இ மெயில்: Sethuraman.sathappan@gmail.com

- சேதுராமன் சாத்தப்பன் -






      Dinamalar
      Follow us