பழனிசாமி இருக்கும்வரை அ.தி.மு.க.,வில் இணைய வாய்ப்பே இல்லை: பன்னீர்செல்வம்
பழனிசாமி இருக்கும்வரை அ.தி.மு.க.,வில் இணைய வாய்ப்பே இல்லை: பன்னீர்செல்வம்
ADDED : டிச 24, 2025 06:23 AM

சென்னை: சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வுடன் கூட்டணி சேரலாமா அல்லது தி.மு.க.,வுடன் கூட்டணியில் சேரலாமா என, பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டது, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன்னுடைய அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தினருடன், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய, பா.ஜ., தலைமை உதவும் என நம்பினார்.
எனவே, கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்து, சுயேச்சையாக ராமநாத புரம் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். ஆனாலும், அத்தொகுதியில் அ.தி.மு.க.,வைக் காட்டிலும் கூடுதல் ஓட்டுகள் பெற்றார்.
தோற்கடிக்க வேண்டும் பா.ஜ ., மீண்டும் அ.தி.மு.க., உடன் கூட்டணி சேர்ந்ததும், பன்னீர்செல்வத்தை கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும், தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன், முழுமையாக பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார்.
எனவே, மீண்டும் அ.தி.மு.க.,வில் இணையவோ, பா.ஜ., கூட்டணியில் இணையவோ வாய் ப்பில்லை என்பதை உணர்ந்த, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அவரிடம் வரும் சட்டசபை தேர்தலில், பழனிசாமியை தோற்கடிக்க, த.வெ.க., அல்லது தி.மு.க., கூட்டணியில் இணைய வே ண்டும் என வலியுறுத்தினர்.
இது தொடர்பாக முடிவெடுக்க, நேற்று தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை, பன்னீர்செல்வம் சென்னையில் கூட்டினார்.
வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ., திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும், பன்னீர்செல்வம் தனித்தனியே அழைத்து, அவர்கள் விருப்பத்தை கேட்டறிந்தார்.
பாடம் புகட்டுவோம் அப்போது அவர்களிடம் ஒரு விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டது. அதில் யாருடன் கூட்டணி சேரலாம் என்ற கேள்விக்கான விடையாக, த.வெ.க., மற்றும் தி.மு.க., என்று மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தது.
இதன் வழியே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இல்லை என்பது தெளிவாகி விட்டது.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழக நிர்வாகிகள் தங்கள் விருப்பத்தை, பன்னீர்செல்வத்திடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப் படையில், அவர் முடிவை அறிவிப்பார் என, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக, பழனிசாமி இருக்கும் அணியில் இணைய வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
இறுதியில் பேசிய பன்னீ ர்செல்வம், 'பழனி சாமி இருக்கும்வரை அ.தி.மு.க.,வில் இணைய மாட்டோம்; அவருக்கு தக்க பாடம் புகட்டுவோம். அ.தி.மு.க., இல்லாத எந்தக் கூட்டணியிலும் இணைவோம் என முன்னாள் அமைச்சர் வைத்தி லிங்கம் மற்றும் கட்சியினர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
'அதை வழிமொழிகிறேன். எந்த சூழ்நிலையிலும் பழனிசாமியுடன் கூட்டணி கிடையாது' என பேசினார்.

