எந்த வளர்ச்சியும் இல்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
எந்த வளர்ச்சியும் இல்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
ADDED : டிச 23, 2024 03:53 PM

ராஞ்சி: திமுக அரசு, தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநிலத்தையும், வளர்ச்சியையும் கெடுத்துவிட்டது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டினார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு  மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு வந்தார்.
ராஞ்சி விமான நிலையத்தில் எல்.முருகன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 7வது முறையாக (2026ல்) ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திமுகவின் இலக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு,ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சியையும் கெடுத்துவிட்டார்கள். கடந்த 3 ஆண்டுகளாக மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும், ஸ்டாலினுடைய  குடும்பம் தான் செல்வச் செழிப்பாக மாறியது.
திமுக தலைமையிலான கூட்டணி, விரைவில் உடைந்து போகும். தி.மு.க.வின் தோல்வியடைந்த ஆட்சியில் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது.
இவ்வாறு எல். முருகன் கூறினார்.

