நிர்வாக திறமையற்ற அரசால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை!
நிர்வாக திறமையற்ற அரசால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை!
ADDED : பிப் 19, 2025 07:09 PM
தமிழகத்தில், பாலியல் வன்கொடுமை என்பது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆசிரியர்களே மாணவியரை பலாத்காரம் செய்யும் கொடுமைகள், ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாக விளங்குவது ஒழுக்கமின்மை. இந்த ஒழுக்கமின்மைக்கு முக்கியக் காரணம், அமோக மது விற்பனையும், அளவுக்கு அதிகமான போதைப் பொருட்கள் நடமாட்டமும்தான்.
மதுவை படிப்படியாக குறைப்பதாக சொல்லிக்கொண்டு, தி.மு.க., அரசு மதுவை ஊக்குவிக்கிறது. மதுவிலக்கு துறையை, மது ஊக்குவிப்பு துறையாக மாற்றிவிட்டது.
தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழக மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது. மாணவ, மாணவியர் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. பெண் காவலர்களே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் கொடூரம் தமிழகத்தில் உள்ளது.
முதல்வர் கள யதார்த்தத்தை தெரிந்து, கொடி கட்டி பறக்கும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை, வேரோடு அழிக்க வேண்டும்.
-- பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்