ADDED : அக் 18, 2025 08:02 AM

கரூர் துயர சம்பவத்தில், உண்மை வெளிவர வேண்டும். உயிரிழந்த 41 அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுக்கிறார். கூட்டணிக்காக, யாரிடத்திலும் சென்று தவம் கிடக்க வேண்டிய அவசியம் கிடையாது. அ.தி.மு.க.,வை தேடி, கூட்டணி கட்சிகள் படையெடுக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கான பக்குவப்பட்ட தலைவராக, எல்லாரையும் ஒருங்கிணைக்கக்கூடிய தலைவராக பழனிசாமி உயர்ந்துள்ளார்.
கரூர் சம்பவத்தின்போது, காவல்துறை கொடுத்த செய்திக்கும், தற்போது சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் தகவலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சட்டசபையில் பழனிசாமி பேசிய கருத்துகளிலும், வெளியே சொன்ன கருத்துகளிலும் உண்மை இருக்கிறது. அதைத்தான் மக்களும் பேசுகின்றனர். கரூர் சம்பவத்தில், தி.மு.க., அரசிடம் இருந்து தெளிவான விளக்கம் வேண்டு ம்.
- ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,