தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மத்திய அமைச்சர் ஷோபா குற்றச்சாட்டு
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மத்திய அமைச்சர் ஷோபா குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 11, 2025 04:30 PM

பொள்ளாச்சி: '' தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது,'' என சிறு குறு நடுத்தர தொழில்துறை மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தென்னை நார் உற்பத்தியாளர்கள் கலந்துரையாடலில், பங்கேற்ற சிறு, குறு நடுத்தர தொழில்துறை மத்திய இணை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மின்கட்டண உயர்வு பிரச்னையை சந்தித்து வருகிறது. தொழிலை மேம்படுத்த தமிழக அரசு எந்த உதவியும் செய்வதில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக கூறுகின்றனர். அதில், பாதி பேருக்கு பணம் கிடைக்கவில்லை. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அனுமதித்து விட்டு, அவர்களே ஓசி பஸ் என்கின்றனர்.
தமிழகத்துக்கு வழங்கிய நிதியை முழுமையாக செயல்படுத்தவில்லை. நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.