/
செய்திகள்
/
தமிழகம்
/
'என் துறையில அந்த திட்டம் இல்லீங்க... என்னால முடியாது தொழில் துறையை கேளுங்க... அவங்ககிட்டே கைநிறைய இருக்கு!' வேதனையை 'ஜோக்'காக வெளிப்படுத்திய தியாகராஜன்

ADDED : மார் 21, 2025 12:33 AM
சென்னை:''கடலுாரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., கேட்டதற்கு, ''என் துறையில் இல்லாத திட்டத்தை செயல்படுத்த முடியாது,'' என, அமைச்சர் தியாகராஜன் பதில் அளித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - அய்யப்பன்: கடலுாரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க, அரசு முன்வருமா?
அமைச்சர் தியாகராஜன்: கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கடலுார் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க, ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், போதிய சாத்தியக்கூறு இல்லாததால் கைவிடப்பட்டது. எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் அரசு பரிசீலிக்கும்.
அய்யப்பன்: கடலுார் மிகவும் பின்தங்கிய மாவட்டம். இங்கு, அரசு அலுவலகங்கள் தவிர, படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற, எந்த தொழில் நிறுவனமும் இல்லை. சிறிய அளவிலாவது, 'மினி டைடல்' பூங்கா அமைக்க வேண்டும்.
அமைச்சர் தியாகராஜன்: பலர் இந்த மாதிரி கோரிக்கை வைத்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில், 'எலக்ட்ரானிக்ஸ் இன்பர்மேஷன் டெக்னாலஜி' துறை, அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.
தமிழகத்தில் டைடல் பூங்கா துவக்கப்பட்டபோது, எல்காட் வசம் அந்த பொறுப்பு இருந்தது. இன்று தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவை மட்டும், தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளன. டைடல், நியோ டைடல், தகவல் தொழில்நுட்பம் ஈர்ப்பு, சலுகை அனைத்தும் தொழில் துறையிடம் உள்ளன.
எனவே, சரியான இடத்தில் கேட்டால், கையில் நிறைய வைத்திருப்பவர்கள் கொடுப்பர். இந்த துறையில் அந்த உரிமைகள் இல்லை.
அய்யப்பன்: கடலுாரில் எந்த விதமான தொழிற்சாலைகளும் இல்லை. மாவட்டத் தலைநகரமாக உள்ளதால், மாணவ -- மாணவியருக்கு உதவியாக, கடலுாரில் சிறிய அளவிலாவது தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க வேண்டும்.
அமைச்சர் தியாகராஜன்: என் துறையில் இல்லாத திட்டத்தை செயல்படுத்த முடியாது. உறுப்பினர் கோரிக்கை நியாயமானது. எந்த துறையில் செயல்படுத்த முடியுமோ, அந்த துறையில் கேட்க வேண்டும். தொழில் துறை அமைச்சர் செய்து கொடுப்பார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.