ADDED : டிச 28, 2024 11:19 PM
சென்னை:சட்ட அமைச்சர் ரகுபதி அறிக்கை:
சென்னை அண்ணா பல்கலையில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை காவல் துறை துரிதமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து, குற்றவாளியை கைது செய்தது குறித்தும், இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும், சென்னை உயர் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டு உள்ளன.
இவ்வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளிவந்ததற்கு, இந்த அறிக்கைகளை இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் சி.சி.டி.என்.எஸ்., அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம்; காவல் துறை காரணம் அல்ல என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பற்றிய சென்னை போலீஸ் கமிஷனரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துகளை பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் நடத்தை விதிகள்படி எந்த தவறும் இல்லை என, தெளிவுபடுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

