தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஊழலுக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் இருக்க வேண்டும்: அமைச்சர் அறிவுரை

 ஊழலுக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் இருக்க வேண்டும்: அமைச்சர் அறிவுரை

 ஊழலுக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் இருக்க வேண்டும்: அமைச்சர் அறிவுரை


ADDED : ஆக 20, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ''ஊழலுக்கு எதிராக தான் எம்.எல்.ஏ.,க்கள் இருக்க வேண்டும்,'' என, உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

அ.தி.மு.க - பழனிசாமி: தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், 10 லட்சம் நெல் மூட்டைகளை விற்க முடியாத சூழல் இருக்கிறது.

இதற்கு காரணம், கொள்முதல் நிலையங்களில் வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் எல்லாம் கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்படவில்லை. அங்கேயே அடுக்கி வைப்பதால், புதிதாக நெல் கொள்முதல் செய்ய முடியவில்லை.

பா.ம.க., - வைத்தி லிங்கம்: நெல் கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் என, மூன்று பேர் வேலை செய்கின்றனர்.

அவர்களுக்கு ஒரு மூட்டைக்கு பத்து ரூபாய் தரப்படுகிறது. பணியாளர்களுக்கு அதிகாரிகள் சணல் வாங்கி தரவில்லை. ஒரு நாளைக்கு, 900 மூட்டைகள் நெல் பிடிக்கப்படுகிறது. சம்பளம், 20, 30 ரூபாய் சேர்த்து வழங்க வேண்டும்.

அமைச்சர் வெங்கட ரமணன்: நேரடி கொள்முதல் நிலையங்களில் பணிபுரிவோருக்கு, 10 ரூபாய் கொடுக்கிறோம் என்றும், அதை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும், உயர்த்தி கொடுத்தால் தான் ஊழல் ஒழியும் என்கிறார்.

ஊழல் ஒழிந்தால் தான் உயர்த்தி கொடுக்க முடியும். ஊழலுக்கு துணை போக முடியாது. 50 ரூபாய், 100 ரூபாய் வாங்குகின்றனர் என்றால் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான்.

எம்.எல்.ஏ.,க்கள் எல்லோரும் ஊழலுக்கு எதிராகத் தான் இருக்க வேண்டும். அதற்காகவே முதல்வர் கார் கொடுக்கிறார், டிரைவர், பெட்ரோல், உதவியாளர்களை கொடுத்துள்ளார்.

பா.ம.க., - சவுமியா: கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு, 900 மூட்டைகள் எடுக்கப்படுகின்றன. அங்கு சாக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. சணல் வாங்கி தரப்படுவதில்லை.

அமைச்சர் வெங்கட ரமணன்: ஆண்டுக்கு ஒரு முறை, 2.50 கோடி ரூபாய் செலவு செய்து சணல் வாங்கிக் கொடுக்கிறோம்.

பா.ம.க., - சவுமியா: ஒரு கொள்முதல் நிலையத்தில் மூன்று பேர் உள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு, 300 மூட்டைகளை ஏற்றி அடுக்க வேண்டும். அதற்கு மூட்டைக்கு பத்து ரூபாய் தான். இதனால், விவசாயிகளிடம் பணம் வாங்குகின்றனர்.

ஒரு சமோசா விற்பவர் கூட, தங்கள் பொருளுக்கு அவர்களே விலை வைக்கின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு அந்த வாய்ப்பே இல்லை.

அமைச்சர் வெங்கட ரமணன்: அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அடுத்த சீசன் கொள்முதலுக்கும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us