மகளிர் சுய உதவிக்குழு யார் ஆட்சியில் தொடக்கம்? அ.தி.மு.க., - தி.மு.க., விவாதம்
மகளிர் சுய உதவிக்குழு யார் ஆட்சியில் தொடக்கம்? அ.தி.மு.க., - தி.மு.க., விவாதம்
ADDED : ஆக 20, 2026 11:04 PM
சென்னை: ''மகளிர் சுய உதவிக்குழு, யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது என, தனி பட்டிமன்றமே நடத்தலாம்,'' என்று துணை சபாநாயகர் ரவிசங்கர் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: மகளிர் சுய உதவிக்குழு, தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்டதாக, தவறான தகவலை தெரிவிக்கின்றனர். கடந்த 1983ல் எம்.ஜி.ஆர்., ஆட்சியில், தர்மபுரியில், மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியை விட, அ.தி.மு.க., ஆட்சியில் தான், அதிகளவில் வங்கிக் கடன் வழங்கப்பட்டன.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு: மகளிர் சுய உதவி குழு, கடந்த 1989ல் கருணாநிதி ஆட்சியில் தர்மபுரியில் தொடங்கப்பட்டது. வேலுமணி, தவறாக 1983 என்கிறார். அவர் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோதே, பலமுறை சட்டசபையில், இது குறித்து பேசி இருக்கிறோம்.
துணை சபாநாயகர் ரவிசங்கர்: எனக்கு தெரிந்து, இப்பிரச்னை குறித்து, கடந்த 10 ஆண்டுகளாக விவாதம் நடக்கிறது. இதற்கு, தனியாக பட்டிமன்றமே நடத்தலாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
