தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பெயரை மாற்றி அழைத்த சபாநாயகரால் சிரிப்பலை

 பெயரை மாற்றி அழைத்த சபாநாயகரால் சிரிப்பலை

 பெயரை மாற்றி அழைத்த சபாநாயகரால் சிரிப்பலை


ADDED : ஆக 20, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் வெற்றிவேலுக்கு பதிலாக, ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் பெயரை, சபாநாயகர் பிரபாகர் குறிப்பிட்டதால், சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.

சட்டசபையில் நேற்று உணவு, நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.

அதில் பேச, அ.தி.மு.க., சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி மரகதம் வெற்றிவேலை பேச அழைப்பதற்கு பதிலாக, மரகதம் குமரவேல் என, சபாநாயகர் பிரபாகர் குறிப்பிட்டார்.

அ.தி.மு.க., சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வென்ற மரகதம் குமரவேல், தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்தவர்.

அவரது பெயரை சபாநாயகர் குறிப்பிட்டதும், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. உடனே தவறை சரி செய்து, மரகதம் வெற்றிவேலை பேசுமாறு கேட்டுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us