ADDED : டிச 13, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுப்புது முகங்கள், புரியாத பிள்ளைகளை வைத்துக் கொண்டு சிலர் கட்சி நடத்துகின்றனர். அனைவரும் நம் பிள்ளைகள் தான்; ஆனாலும், விபரம் தெரியாமல் உள்ளனர். அவர்களை வைத்து, ஒரு கூட்டத்தை, மடை மாற்றம் செய்து, நம் மீது தேவையில்லாத புகார்களை வீசி வருகின்றனர்.
நாங்கள் காரில் போகும்போது கூட, அந்த கட்சி பெயரை சொல்லி சத்தம் போடுகின்றனர். நாம் பதற்றப்படக்கூடாது; நின்று, அவர்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை; அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர். நாம் 75 ஆண்டு கால சீனியர் திராவிட இயக்கம். சிறு பிள்ளைகளுடன் சரி சமமாக நின்றால், அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போகும்.
- மகேஷ், தமிழக அமைச்சர், தி.மு.க.,

