sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்ட போறாங்க: விஜய்

/

வரும் தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்ட போறாங்க: விஜய்

வரும் தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்ட போறாங்க: விஜய்

வரும் தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்ட போறாங்க: விஜய்

5


UPDATED : மே 31, 2025 05:34 AM

ADDED : மே 31, 2025 03:26 AM

Google News

UPDATED : மே 31, 2025 05:34 AM ADDED : மே 31, 2025 03:26 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''கொள்ளை அடித்த பணத்தை, அடுத்த ஆண்டு வண்டி வண்டியாக எடுத்து வந்து கொட்டப் போகின்றனர்,'' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறினார்.

தமிழகத்தில் இந்தஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், சட்டசபை தொகுதி அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு, த.வெ.க., சார்பில், 'விஜய் கல்வி விருது' வழங்கும் விழா, சென்னை பனையூரில் நேற்று நடந்தது.

கொள்ளை அடித்த பணம்


இதில், மாநில அளவில் முதல் இடங்களை பெற்ற மாணவர் - மாணவிக்கு வைரக்கம்மல், வைர மோதிரம் வழங்கி, விஜய் பேசியதாவது:

கல்வியில் சாதிக்க வேண்டும்; அதை மறுக்கவில்லை. அதற்காக, ஒரே ஒரு தேர்வில் சாதிக்க வேண்டும் என்பது சாதனை அல்ல. ஒரு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

'நீட்' தேர்வு மட்டும்தான் உலகமில்லை. அதைத் தாண்டி உலகம் மிகப்பெரியது. அதில் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. மனதையும், சிந்தனையையும் தைரியமாகவும், ஜனநாயகமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகம் ஒன்று இருந்தால்தான், இந்த உலகம் சுதந்திரமாக இயங்க முடியும். ஜனநாயகம் என்பது முறையாக இருந்தால் தான், அனைவருக்கும் எல்லாம் சரிசமமாகக் கிடைக்கும்.

வீட்டில் உள்ளவர்களிடம் ஜனநாயகக் கடைமையை சரியாக செய்ய சொல்லுங்கள். ஜனநாயகக் கடமை என்பது பெரிய விஷயமல்ல; சாதாரணமான விஷயம்தான். யார் நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் என்று பார்த்து, தேர்வு செய்ய வேண்டும்; இதுதான், அந்த கடமை.

பணம் கொடுத்து ஓட்டு வாங்கி, வெற்றி பெறுவதை ஊக்குவிக்கக்கூடாது. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

இதை பின்பற்ற வேண்டும். அடுத்த ஆண்டு வண்டி வண்டியாக பணத்தை எடுத்து வந்து கொட்டப் போகின்றனர். அவை அனைத்தும் உங்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணம்தான். என்ன பண்ண போகிறீர்கள்; என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

சிந்திக்க வேண்டும்


குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் எதையும் கட்டாயப்படுத்தக்கூடாது; அழுத்தம் தரக்கூடாது. எத்தனை தடை வந்தாலும், அவரவர் பிடித்த விஷயத்தில் சாதித்துக் காட்டுவர்.

ஜாதி, மதம் வைத்து பிரிவினையை ஏற்படுத்தும் பக்கம் செல்லக்கூடாது. விவசாயிகள், ஜாதியை பார்த்து பொருட்களை விளைவிக்கவில்லை.

போதைப் பொருட்களை ஒதுக்குவதுபோல ஜாதி, மதத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.தொழில்நுட்பம், அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us