உள்ளடக்கத்திற்கு செல்ல

அடிப்படை புரிதலின்றி 'நீட்' தேர்வை எதிர்க்கின்றனர்
அடிப்படை புரிதலின்றி 'நீட்' தேர்வை எதிர்க்கின்றனர்
ADDED : ஜூலை 25, 2026 03:20 AM

அ நிறம் | அளவு
மருத்துவ படிப்பு குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல், திரைத்துறையினர் சிலர், 'நீட்' தேர்வை எதிர்த்து வருகின்றனர். 'நீட்' தேர்வு இல்லாத போது, அரசு பள்ளி மாணவர்கள், அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது போல பேசுகின்றனர். ஆனால், 'நீட்' தேர்வு வந்த பின்னரே, சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், மருத்துவராகும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். இப்போது, எவ்வளவு பணம் இருந்தாலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறாமல், மருத்துவராக முடியாது.
பிரதமர் மோடி ஆட்சியில், அரசு மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை, 145ல் இருந்து 441 ஆகவும், மருத்துவ படிப்பு இடங்கள், 51,000ல் இருந்து 1.36 லட்சமாகவும் அதிகரித்துள்ளன. உலக அளவில் எல்லா படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு இருக்கும் போது, மருத்துவ படிப்புக்கு மட்டும் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பது, நியாயமல்ல. மருத்துவ கல்வி குறித்து தெரியாமல், 'நீட்' தேர்வை எதிர்க்க வேண்டாம்.
- தமிழிசை
முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,
