sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 நல்லா போடுறாங்க 'சீன்'

/

 நல்லா போடுறாங்க 'சீன்'

 நல்லா போடுறாங்க 'சீன்'

 நல்லா போடுறாங்க 'சீன்'


ADDED : பிப் 19, 2026 03:57 AM

Google News

ADDED : பிப் 19, 2026 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருச்சி விமான நிலையத்தில், சீமான், திருமாவளவன், தமிழிசை, சிவா ஆகியோர் சந்தித்து கொண்டனர். அந்த புகைப்படத்தை, 'முறுவலிக்கும் முரண்கள்' என தலைப்பிட்டு, வி.சி., தலைவர் திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.

ஈ.வெ.ராமசாமியை விமர்சித்து, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். இதன் காரணமாக, வி.சி., தலைவர் திருமாவளவன், கடுமையாக சீமானை விமர்சித்து வருகிறார்.

நா.த.க.,விற்கு எதிராக, 'தமிழ் எழுச்சி' மாநாட்டை நடத்தப்போவதாக, திருமாவளவன் அறிவித்துள்ளார். இதனால் இரு கட்சி தொண்டர்கள் இடையே, சமூக வலைதளங்களில் கடும் மோதல் நடந்து வருகிறது.

பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசையும், திருமாவளவன் செயல்பாடுகளை, கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில், சீமான், திருமாவளவன், தமிழிசை, தி.மு.க., - எம்.பி., சிவா ஆகியோர், நேற்று சந்தித்துக் கொண்டனர். நான்கு பேரையும் சிவா செல்பி எடுத்தார்.

அந்த புகைப்படத்தை, 'முறுவலிக்கும் முரண்கள்' என தலைப்பிட்டு, வி.சி., தலைவர் திருமாவளவன், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கருத்து வேறுபாடுடைய, நான்கு அரசியல் கட்சிகளின், முக்கிய தலைவர்கள் சந்தித்து கொண்டது, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.






      Dinamalar
      Follow us