திருச்செந்துார் முருகன் கோவில் குடமுழுக்கு நேரம் மாற்ற மறுப்பு
திருச்செந்துார் முருகன் கோவில் குடமுழுக்கு நேரம் மாற்ற மறுப்பு
ADDED : ஜூன் 05, 2025 12:27 AM

திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் துாத்துக்குடியில் உள்ள திருச்செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 7ம் தேதி நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேக நேரத்தை முகூர்த்த நேரமான பகல் 12:05 முதல் 12:45 மணி வரை மாற்ற உத்தரவிடக்கோரி, சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 'ஏற்கனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உரிய விசாரணையை நடத்தி மனுவை தள்ளுபடி செய்துள்ளதால் மேற்கொண்டு விசாரிக்க எதுவும் இல்லை' எனக் கூறி, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்
-டில்லி சிறப்பு நிருபர் -.