திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; பொதுநல வழக்கு தள்ளுபடி
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; பொதுநல வழக்கு தள்ளுபடி
ADDED : ஏப் 09, 2026 02:39 PM

நமது நிருபர்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி ரமேஷ் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவர் மனுவில், ''திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் தமிழக அரசு தடுக்கிறது . தீபத் தூணில் தீபம் ஏற்ற மற்றும் அங்கு வழிபட ஹிந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
சட்டப் போராட்டம் நடத்துகிறது. ரம்ஜான் பண்டிகையின் போது மலையில் வழிபட முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இது சட்ட மீறலாகும். கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோயில் இணை கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 09) ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் சதீஷ்குமார் , ஜோதிராமன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விளம்பர நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
''மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. வருங்காலங்களில் இது போன்ற வழக்கு தாக்கல் செய்ய மாட்டேன் என மனுதாரர் உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் அபராதம் நீக்கப்படும்'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
