திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு கேள்வி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு கேள்வி
ADDED : டிச 06, 2025 10:22 AM

சென்னை: திருப்பரங்குன்றத்தில் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம், சரித்திர ஆவணங்கள் படி பார்த்தால், 350 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்றப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மேலே உள்ள மலை உச்சியில் கொப்பரையில் தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின் மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ளுவீர்கள்.
அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு? இது தொடர்பாக வழக்குகள் பல்வேறு கட்டத்தில் நீதிமன்றங்களில் நடந்து இருக்கிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் இந்தாண்டு மாத்திரம் ஒரு கோடி மக்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.
திருவண்ணாமலையில் 35 லட்சம் மக்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த அரசை பொறுத்தவரை சட்டத்தை மதிக்கிற அரசு. பக்தர்கள் நலன் காக்கிற அரசு.இவ்வாறு சேகர் பாபு கூறினார்.

