திருப்பரங்குன்றம் மலை வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி!
திருப்பரங்குன்றம் மலை வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி!
ADDED : பிப் 19, 2025 05:18 PM

மதுரை; திருப்பரங்குன்றம் மலை வழக்குகள் அனைத்தையும் மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் ஒரு பக்கம் காசி விஸ்வநாதர் கோவிலும், மறுபக்கம் பள்ளிவாசலும் உள்ளது. இந்த மலை பகுதியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீக்க கோரி ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்குகளை தொடர்ந்திருந்தன.
இந்த வழக்குகளின் விசாரணை, நீதிபதிகள் முன்பு இன்று (பிப்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டில் வழிபாட்டு தலங்கள் பற்றிய வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்வதாக கூறி உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையின் போது, திருப்பரங்குன்றம் மக்கள் சண்டை போடவில்லை என்றாலும், நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஏன் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.