தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரயிலில் படியில் பயணம் திருவள்ளூர் மாணவர் பலி

ரயிலில் படியில் பயணம் திருவள்ளூர் மாணவர் பலி

ரயிலில் படியில் பயணம் திருவள்ளூர் மாணவர் பலி


ADDED : அக் 08, 2024 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்பாடி: திருவள்ளூர் மாவட்டம், காக்களூரைச் சேர்ந்த மாணவர் அஸ்வந்த், 17. இவர், வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்தாங்கலில் உள்ள தனியார் கல்லுாரி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

விடுமுறைக்கு திருவள்ளூரிலுள்ள தன் வீட்டிற்கு சென்று விட்டு, விடுமுறை முடிந்து, கல்லுாரி செல்ல நேற்று சென்னை - மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, காட்பாடிக்கு படியில் அமர்ந்து பயணம் செய்தார்.

காட்பாடி அருகே ரயில் சென்றபோது, தவறி கீழே விழுந்ததில் பலியானார். அவர் உடலை கைப்பற்றிய காட்பாடி போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us